நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வழங்கப்படும் எரிபொருளின் தரம் குறித்து மீண்டும் ஆய்வு நடத்தப்பட உள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை, எடைகள் மற்றும் அளவீடுகள் திணைக்களம் ஆகியன இணைந்து நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை பரிசோதிக்கும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.