Friday, March 21, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டு17,820 கிலோ அரிசி காணாமல் போனமை தொடர்பில் விசாரணை

17,820 கிலோ அரிசி காணாமல் போனமை தொடர்பில் விசாரணை

கால்நடை தீவனமாக ஐந்து பாரவூர்திகளில் கொண்டு செல்லப்பட்ட சுமார் 3 மில்லியன் ரூபா பெறுமதியான 17,820 கிலோ அரிசி காணாமல் போனமை தொடர்பில் முகத்துவாரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வத்தளை எலகந்தவில் உள்ள களஞ்சியசாலையில் இருந்து முகத்துவாரத்தில் உள்ள நிறுவன வளாகத்திற்கு கொண்டு வரப்பட்ட அரிசி இருப்பு காணாமல் போனதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சரக்குகளை எடைபோட்ட பின்னர் , லொரிகள் நிறுவன வளாகத்திற்கு வெளியே ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் நிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அரிசி லொரியை மீண்டும் நிறுவனத்திற்குள் கொண்டு வந்தபோது, ​​லொரியை மீண்டும் தராசில் வைத்து எடை பார்த்ததில், அசல் எடையை விட எடை குறைவாக இருந்ததால், அரிசி திருடப்பட்ட தகவல் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles