Monday, July 7, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் - அமைச்சர் கஞ்சன

முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் – அமைச்சர் கஞ்சன

முச்சக்கரவண்டி செலுத்தும் சுய தொழிலாளர்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு இரு வாரங்களுக்குள் அதிகரிக்கப்படும் என எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

சுய தொழிலில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளுக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், இந்த நடவடிக்கையில் தாமதம் ஏற்படுவதற்கான காரணத்தையும் நாடாளுமன்றில் இன்று வினவினார்.

இதற்கு பதிலளித்த எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, நீண்டகாலமாக தொழில் ரீதியாக முச்சக்கரவண்டி செலுத்துபவர்களை வகைப்படுத்துவதற்கு சில நாட்கள் தேவைப்படுகிறது.

கிடைக்கப்பெற்ற தகவல்களை சரிபார்த்து ஒதுக்கீட்டை அதிகரிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள குறைந்தது இருவாரங்களாவது தேவைப்படும்.

தற்போது, வாடகை முச்சக்கரவண்டிகள் தொடர்பான தரவுகளை QR இல் உள்ளீடு செய்ய நடவடிக்க எடுக்கப்படுகிறது.

இது நிறைவடைந்த பின்னர் அவர்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க முடியும் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles