Tuesday, March 17, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமொட்டுக் கட்சியின் தலைமைப் பொறுப்பை பசில் ஏற்பார்

மொட்டுக் கட்சியின் தலைமைப் பொறுப்பை பசில் ஏற்பார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை பொறுப்பை பசில் ராஜபக்ஷ ஏற்பார் என இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்துள்ளார்.

பொலனறுவை பகுதியில் ஊடகங்களுக்கு கருதுரைத்த அவர்,

பசில் ராஜபக்ஷ, மீண்டு நாடு திரும்பியதன் பின்னர் அவருக்கு பொதுஜன பெரமுனவின் தலைமை பொறுப்பை வழங்கவுள்ளோம். கோட்டாபய ராஜபக்ஷவை நாம் ஜனாதிபதியாக்குவோம் என மக்களிடம் சென்றிருந்தோம்.

இதற்காக நாம் மக்களிடம் மன்னிப்பை கோருவதோடு எம்மால் அதனை பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை.

தற்போதும் உள்ள முக்கிய கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே ஆகும். மக்கள் எம்முடன் உள்ளனர்.

பசில் ராஜபக்ஷ அடுத்த சில நாட்களில் நாட்டுக்கு மீண்டும் திரும்பி எமது கட்சிக்கு தலைமைத்துவத்தை வழங்குவார் என குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles