Tuesday, July 15, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதிலினியின் ஊழியர்களின் தொலைபேசிகளும் சோதனை

திலினியின் ஊழியர்களின் தொலைபேசிகளும் சோதனை

பல கோடி ரூபா நிதி மோசடி வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் உலக வர்த்தக நிலைய பணியகத்தில் பணிபுரிந்த ஊழியர்களிடம் இருந்த கைத்தொலைபேசிகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.

அவற்றைக் கொண்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதேவேளை, திலினி பிரியமாலிக்கு சொந்தமான பல தொலைபேசிகள் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனிடையே, சமூகவலைத்தளங்களில் பரவி வரும் திலினி பிரியமாலி தொடர்பான ஒலிப் பதிவுகளை பயன்படுத்தி விசாரணைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரி குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles