யாழ்ப்பாணம் – பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள சுகாதாரப் பணிமனை அலுவலகத்தின் காணியில், விடுதலை புலிகளின் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அங்கு தேடுதல் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த தேடுதல் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
இதில் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் ஆகியோர் இணைந்து தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

