Saturday, September 20, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுருத்தெட்டுவே ஆனந்த தேரரின் V8 வாகனம் திருட்டுத்தனமாக விற்பனை

முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் V8 வாகனம் திருட்டுத்தனமாக விற்பனை

தனக்கு சொந்தமான 3 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஃப்ராடோ V8 ஜீப் வண்டியை, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவர் இரகசியமாக விற்பனை செய்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் நாரஹேன்பிட்டி அபயராம விகாராதிபதியுமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

விகாரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மான்னப்பெரும தமக்கு அன்பளிப்பாக வழங்கிய குறித்த வாகனத்தை விற்பனை செய்து விட்டு, ஜப்பானில் இருந்து புதிய கார் ஒன்றை பெற்றுக்கொள்ள இருந்ததாக அவர் தெரிவித்தார்.

எனினும் குறித்த வாகனத்தை பெற்றுக் கொண்டு விற்பனை செய்த மாநகர சபை உறுப்பினர், தமக்கு பணத்தை வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் சட்ட சிக்கல் உள்ளதாகவும், மாநகர சபை உறுப்பினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆனந்த தேரர் தெரிவித்தார்.

திலினி பிரியமாலி என்ற பெண்ணுக்கு தான் எந்தவொரு வாகனத்தையும் வழங்கவில்லை எனவும், அவ்வாறு பரவும் செய்திகள் உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் கூறினார்.

இது போன்ற பொய்யான செய்திகளை பரப்புபவர்கள், திட்டத்தம்மவேதனிய கர்மாவால் தண்டிக்கப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles