Saturday, July 5, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநான் சட்டத்தை கண்டு அஞ்சுகிறேன் - சனத் MP

நான் சட்டத்தை கண்டு அஞ்சுகிறேன் – சனத் MP

உரிய நேரத்தில் நீதிமன்றில் ஆஜராகாத இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் நேற்று (13) உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் மேன்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணையை மீளப்பெற தீர்மானித்ததுடன் அமைச்சர் சனத் நிஷாந்த நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.

நீதிமன்றத்தை அவமதித்ததாகவும், நீதிபதியின் அதிகாரத்தை சவால் செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இனி கால தாமதமின்றி உரிய நேரத்திற்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிபதி, சனத் நிஷாந்தவுக்கு எச்சரித்திருந்தார்.

நீதிமன்றத்தை விட்டு வெளியேறும் போது அமைச்சர் சனத் நிஷாந்த ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார்.

உண்மையாகவே, நான் சட்டத்தைக் கண்டு அஞ்சுகிறேன் என அவர் தெரிவித்திருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles