இலாபம் ஈட்டிவரும் அரச வங்கிகளின் பங்குகளை தனியார் துறைக்கு விற்பனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, இலங்கை வங்கி ஊழியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்த அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்துள்ளது.
அந்த திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரச வங்கிகளின் 20% பங்குகளை ஊழியர்களுக்கும் வைப்பாளர்களுக்கும் வழங்கும் போர்வையில், அரச வங்கிகளை தனியாருக்கு விற்க அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.