Friday, September 19, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎனது குடும்பம் பொருளாதார நெருக்கடியால் அவதிப்படுகிறது - யொஹானி டி சில்வா

எனது குடும்பம் பொருளாதார நெருக்கடியால் அவதிப்படுகிறது – யொஹானி டி சில்வா

இலங்கை தற்போது எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி, மனவேதனையை ஏற்படுத்துவதாக இந்தியாவில் தங்கியிருக்கும் பிரபல பாடகி யொஹானி டி சில்வா தெரிவித்துள்ளார்.

நெருக்கடியிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஒரே வழி நம்பிக்கை என்று அவர் கூறியுள்ளார்.

தனது குடும்பம் இலங்கையில் நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் போது அவர்களுடன் இருக்க முடியாததை எண்ணி வருந்துகிறேன்.

என் குடும்பத்தில் பலர் உள்ளனர். அவர்கள் அனைவரையும் இந்தியாவுக்கு அழைத்து வர முடியாது. எனினும் எனது இசை அவர்களை சென்றடையும் என்றார்.

இந்தியன் எக்ஸ்ப்ரஸ் இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles