Wednesday, April 15, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅலுவலக ரயில்களுக்கான நேர அட்டவணையில் மாற்றம்

அலுவலக ரயில்களுக்கான நேர அட்டவணையில் மாற்றம்

காலை வேளையில் இயங்கும் அலுவலக ரயில்களின் திருத்தப்பட்ட நேர அட்டவணை இம்மாதம் 20 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாலையில் இயக்கப்படும் அலுவலக ரயில்களின் நேர அட்டவணையிலும் திருத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துள்ளதால், ரயில்கள் கடந்து செல்லும் நிலையங்களில் நிறுத்தப்படும் நேரம் அதிகரித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டைக்கும் பாணந்துறைக்கும் இடையிலான புகையிரத மார்க்கம் சேதமடைந்துள்ளமையினால் கால அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles