மசகு எண்ணெய் பற்றாக்குறையால் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மீளவும் மூடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டுள்ளதாக எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நாளாந்தம் 450-500 மெட்ரிக் டன் மண்ணெண்ணெய் தேவைப்படுகிறது.
ஆனால் தற்போது ஒரு நாளைக்கு 50 மெட்ரிக் டன் மட்டுமே சந்தைக்கு விநியோகிக்கப்படுகிறது.
சுத்திகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய் அல்லது ஜெட் ஒயிலை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.