விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி WTC இல் இயக்கி வந்த வர்த்தக நிலையத்தின் ஊழியர்களும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, அந்த நிறுவனத்தின் ஊடகப் பணிப்பாளர்களாகப் பணியாற்றும் பிரபல அறிவிப்பாளர் சுரங்கி கொடிதுவக்கு மற்றும் தனஞ்சய நாணயக்கார ஆகியோர் இன்று (13) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகினர்.
தமது நிறுவனத் தலைவரின் அறிவுறுத்தலின்படி நிறுவனப் பணிகளைத் தொடர்வதாக அவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
எமது நிறுவனம் மீதான பெரும்பாலான குற்றச்சாட்டுகள் சரியான தகவல்களின் அடிப்படையில் இல்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்த நிதி பரிவர்த்தனைகளை செய்தவர்கள் யார் என்பதை கூற முடியாது.
நேற்று தமது நிறுவனத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சோதனையிட்டதாகவும், அதற்கு எமது நிறுவன ஊழியர்களும் ஆதரவளித்ததாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.