Sunday, May 11, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதலை - கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

தலை – கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

மட்டக்குளி கதிரான பிரதேசத்தை அண்டிய களனி ஆற்றில் தலை மற்றும் கைகளற்ற நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்து வந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

பிரதேசவாசிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

குறித்த நபரின் தலை மற்றும் கைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், வலது காலின் கீழ் பகுதி முழங்காலில் இருந்து வெட்டப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் வீங்கியுள்ளதுடன், அதன் பாகங்களை விலங்குகளுக்கு இரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் கந்தானை பிரதேசத்தில் வசிக்கும் ஒருவருடையது என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா போன்ற பல கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles