Wednesday, January 14, 2026
22.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயுவதி கடத்தப்பட்ட சம்பவம்: இளைஞர்கள் மூவர் கைது

யுவதி கடத்தப்பட்ட சம்பவம்: இளைஞர்கள் மூவர் கைது

அளுத்கம – மொரகல்ல பிரதேசத்தில் 23 வயதுடைய யுவதியொருவர் நேற்று கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் குறித்த பெண்ணை கடத்தி யக்வத்தையில் உள்ள வீடொன்றுக்கு காரில் ஏற்றிச் செல்ல முற்பட்டுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், பொலிஸார் வாகனத்தை பின்தொடர்ந்து சென்று சந்தேக நபர்களைக் கைது செய்ததுடன் வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 21, 25 மற்றும் 28 வயதுடைய அளுத்கம மற்றும் மொரகல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

காதல் தோல்வி காரணமாக இந்தக் கடத்தல் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட யுவதி நேற்றிரவு அளுத்கம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles