Saturday, October 11, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டு9 வயது சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்த பெண் கைது

9 வயது சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்த பெண் கைது

9 வயதான சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியின் தாயார் சிறுவயதிலேயே அவரை விட்டுச் சென்றுள்ளதுடன், தந்தை வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மிளகாய் மற்றும் மிளகு கலந்த நீரை ஊற்றுதல், அடித்தல், சுடுதல், கழுத்தை நெரித்தல் போன்ற சித்திரவதைகளை குறித்த பெண் செய்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

உன்னை கொன்றுவிட்டு பதினான்கு நாட்கள் சிறைக்கு செல்வேன் என குறித்த பெண் மிரட்டியதாக சிறுமியின் வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது.

சிறுமியின் உடல் முழுவதும் பல தீக்காயங்கள் மற்றும் காயங்கள் காணப்படுவதாகவும், சில இடங்களில் தொடும் போது அவர் வலியால் அவதிப்படுவதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் மேலும் தெரிவித்தார்.

கைதான பெண் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles