ஜனசபை அமைப்பை ஸ்தாபிப்பதற்கான தேசிய பேரவை செயலகத்தை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
சீர்திருத்தம் பற்றிய சொற்பொழிவு என அழைக்கப்படும் ஜன சபை அமைப்பை மீண்டும் நிறுவுவது தொடர்பான பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
இனம், மதம், சாதி, அரசியல் கட்சிகளால் பிரிந்து கிடக்கும் இலங்கைச் சமூகம், ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளிலும் பேதமின்றி பொதுக் கூட்டத்தை உருவாக்கி, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தலையிட வேண்டும் என இப்பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசியலில் இது ஒரு விசேட திருப்புமுனை எனவும், கூட்டுறவு ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு அரச அனுசரணை வரை முறையாக அதனை நிறுவுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.