Sunday, October 12, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதிலினி பிரியமாலி செய்த நிதி மோசடிகள்

திலினி பிரியமாலி செய்த நிதி மோசடிகள்

நிதிமோசடி குற்றச்சாட்டில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி என்ற பெண், இதற்கு முன்னர் நீண்டகாலமாகவே பல்வேறு நிதிமுறைக்கேடுகளுடன் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

1982ஆம் ஆண்டு களுத்துறையில் பிறந்த அவர், பல்வேறு ஜனரஞ்சக பிரமுகர்களிடம் இருந்து பல கோடிகளை மோசடி செய்து, அதி சொகுசு வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.

அண்மையில் அவர் கைது செய்யப்பட்டார்.

அரசியல்வாதிகள், நடிகர்கள் என்று பல்வேறு தரப்பிடம் இருந்து அவர் பல கோடி ரூபாகளை மோசடி செய்தமை தெரியவந்ததை அடுத்தே கைது செய்யப்பட்டிருந்தார்.

எனினும் அவர் பல வருடங்களுக்கு முன்னர் சாதாரண நபர்களிடமும் மோசடிகளை புரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல வருடங்களுக்கு முன்னர் அவர் அல்டோ வகை கார் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக அதன் உரிமையாளருக்கு போலியான காசோலை ஒன்றை வழங்கியமையே அவரது முதலாவது மோசடியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இவ்வாறு ஏமாற்றப்பட்ட கார் உரிமையாளருக்கு கிடைக்கப்பெற்ற கல்கிஸ்ஸை பகுதியில் உள்ள முகவரி ஒன்றுக்கு சென்ற போது, அங்குள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் திலினி பிரியமாலி மோசடிகளை புரிந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் இடம்பெற்றதன் பின்னர் மீண்டும் 2020ஆம் ஆண்டு குறித்த நபர் திலினி பிரியமாலியை பேஸ்புக்மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.

அதன்போது திலினி சுகபோக வாழ்க்கையை நடத்தி வந்தமை தெரியவந்ததாக, குறித்த நபர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles