அழகு நிலையங்களை நடத்துவதற்கு அத்தியாவசியமான பொருட்களை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு அனுமதி கோரியுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.
அழகுசாதனப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் சுமார் 100% அழகு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்தத் துறையில் பணியாற்றிய சுமார் நான்கு இலட்சம் பேர் வேலையை இழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.