Monday, November 18, 2024
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசர்வ கட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டிருந்தால் உலக நாடுகளின் உதவி கிடைத்திருக்கும்

சர்வ கட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டிருந்தால் உலக நாடுகளின் உதவி கிடைத்திருக்கும்

சர்வகட்சி அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டிருந்தால், உலக நாடுகள் இலங்கைக்கு உதவி இருக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தற்போதைய பல பிரச்சினைகளுக்கு மத்தியில், நாட்டை ஜனநாயக ரீதியாக கொண்டு செல்வதே தற்போது தேவையாக உள்ளது.

பசி, உணவின்மை, விவசாய பிரச்சினை, மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. பல வைத்தியர்கள் தற்போது நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.

சுகாதாரj;துறை பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளது.

பணம் இன்மையால், மேலதிக வகுப்புக்களுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இவ்வாறான பல பிரச்சினைகள் காணப்படுகின்ற நிலையில், நாடு என்ற ரீதியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் எம்மிடையே பேதங்கள் காணப்படுவது பொருத்தமற்றது.

எனினும் மக்களின் கருத்துக்களுக்கு செவிமடுத்து செயல்படுவது அவசியமாகும்.

சர்வகட்சி அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்குமாயின் பல நாடுகளின் உதவி எமக்கு கிடைத்திருக்கும். இதன் ஊடாக நாட்டை தற்போதைய நிலையில் இருந்து மீட்டிருக்க முடியும். எனினும், சர்வகட்சி அரசாங்கத்திற்கு தற்போதைய அரசாங்கத்தில் உள்ள சிலரும் ஒத்துழைப்பு வழங்க மறுத்தனர்.

இந்த நிலையில் நாட்டை கட்டி எழுப்புவதற்காக மேற்கொள்ளப்படும் தீர்மானங்களுக்கும் மக்களின் நலன்களுக்காக மேற்கொள்ளப்படும் தீர்மானங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles