நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத்தை சந்தித்தனர்.
இதன்போது, இலங்கை எதிர்நோக்கும் பாரிய சவால்கள் மற்றும் அவற்றை சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் 2022 ஆம் ஆண்டுக்கான ஒன்றிணைந்த மாநாடு வொஷிங்டனில் நேற்று ஆரம்பமானது.
இந்த முறை குறித்த மாநாட்டை அங்கத்துவப்படுத்தி இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.