Friday, July 18, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஊழல் மோசடிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை

ஊழல் மோசடிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை

நாட்டில் ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அனைவரையும் பிடியாணை இன்றி கைது செய்வதற்கு தேவையான சட்டவிதிகளை உருவாக்க அரசாங்கம் தயாராகி வருகின்றது.

முன்மொழியப்பட்டுள்ள புதிய ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவின் கீழ் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

கைது செய்யும் அதிகாரிகள் 24 மணி நேரமும் கைது செய்யப்பட்டவர்களை காவலில் வைக்க முடியும்.

இதேவேளை, இலங்கைக்கு வெளியில் இருந்து ஊழலில் ஈடுபட்டமைக்கான சாட்சியங்கள் உள்ள நபர்களையும் கைது செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான 108 பக்கங்களைக் கொண்ட ஊழல் தடுப்புச் சட்டம் தற்போது பொதுமக்களின் கவனத்திற்கு பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

ஊழலுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சுயாதீன ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதுடன், ஊழல் நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி உரிய நடவடிக்கையை ஆணைக்குழு மேற்கொள்ளும்.

புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த தகவல்களை ஆணையம் பெற முடியும்.

எந்தவொரு தரவுத் தொகுப்பையும் அணுகுவதற்கான உரிமையை ஆணையம் கொண்டுள்ளது.

இந்தச் சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை அரச அதிகாரிகள் இலங்கைக்குள்ளும் இலங்கைக்கு வெளியிலும் தங்களுடைய சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை வெளிப்படுத்த வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles