Wednesday, March 18, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசாரதி அனுமதிப்பத்திரம் சார்ந்த கட்டணங்கள் அதிகரிப்பு

சாரதி அனுமதிப்பத்திரம் சார்ந்த கட்டணங்கள் அதிகரிப்பு

புதிதாக வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணங்கள், ஓட்டுநர் உரிமம் இருந்தால், அதனை புதுப்பித்தல் அல்லது செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல் மற்றும் ஏற்கனவே உள்ள வாகன ஓட்டுநர் உரிமத்தை புதிய ஓட்டுநர் உரிமமாக மாற்றுவதற்கான கட்டணம் ஆகியவை அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன, அதிவிசேட வர்த்தமானி மூலம் சாதாரண மற்றும் ஒரே நாள் சேவையின் கீழ் வரும் சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்களை திருத்தியமைத்துள்ளார்.

இதன் கீழ், 2009 மார்ச் 26 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 2009 ஆம் ஆண்டின் இலக்கம் 01 ஆம் இலக்க சாரதி அனுமதிப்பத்திர ஒழுங்குமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

புதிய அதிவிசேட வர்த்தமானியின் அடிப்படையில், ஒரு வகுப்பிற்கான கற்றல் அனுமதி மற்றும் புதிய ஓட்டுநர் உரிமத்திற்கான விண்ணப்ப கட்டணம், சாதாரண சேவையின் கீழ் 2,500 ரூபா, ஒரு நாள் சேவையின் கீழ் 3,500. ரூபாவாக திருத்தப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் இரண்டு வகுப்புகளுக்கு சாதாரண சேவையின் கீழ் கட்டணம் 3,000 ரூபா மற்றும் ஒரே நாள் சேவைக்கு 4,000 ரூபாவாக அறவிடப்படும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles