Sunday, January 25, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டு3 இலட்சம் பேருக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளை வழங்க திட்டம்

3 இலட்சம் பேருக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளை வழங்க திட்டம்

இந்த வருடத்தில் 3 இலட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், தற்போது வரையில், இரண்டு இலட்சத்து 41 ஆயிரத்து 34 ஐ கடந்துள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.

மத்திய வங்கியின் தரவுகளின் அடிப்படையில், நாட்டில் வருடாந்தம் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக செல்வோரின் எண்ணிக்கை பொதுவாக இரண்டு இலட்சத்து எண்பதாயிரத்திற்கும் மூன்று இலட்சத்திற்கும் இடைப்பட்டதாக காணப்படும்.

2014ஆம் ஆண்டில் 3 இலட்சத்து 703 பேர் வெளிநாடுகளில் வேலைவாய்பை பெற்றுள்ளனர்.

அதன்பின்னர் 2016ஆம் ஆண்டு முதல், தொழில்வாய்ப்புகளுக்கு வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை படிப்படையாக குறைவடைந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பணியகம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles