அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின்னர் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஒன்று நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னதான உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களது எண்ணிக்கையை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 8000இல் இருந்து 4000க்கு குறைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மக்களவை (ஜனசபா) முறைமையை கொண்டுவரவும் திட்டமிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தள்ளார்.