66 குழந்தைகளின் மரணத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் இந்தியாவின் நான்கு வகையான இருமல் சிரப்கள் இலங்கைக்கு கொண்டு வரப்படவில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆபிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் அண்மையில் உயிரிழந்ததோடு இதற்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்கு வகையான இருமல் சிரப்களே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து சுகாதார அமைச்சில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துரைத்த அமைச்சர்,
மருந்துகளை இறக்குமதி செய்யும் போது ஒழுங்குபடுத்தும் முகவர் நிலையங்கள் கவனமாக நடைமுறையில் உள்ளன.
குறித்த மருந்துகள் நாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை என விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
பல்வேறு நாடுகளினால் வழங்கப்பட்ட மருந்து நன்கொடைகளும் பரிசோதிக்கப்பட்டன என்றார்