நெல் வியாபாரத்தை கட்டுப்படுத்தும் அனைத்து மாஃபியாக்களும் பொலன்னறுவையில் இருக்கும் போது, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஏன் நெல் மாபியாவுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார் என அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் அழைப்பாளர் நாமல் கருணாதிலக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொலன்னறுவையில் நெல் மாஃபியாக்களை வழிநடத்தும் முக்கிய நபர்களில் முன்னாள் ஜனாதிபதியின் சகோதரரும் ஒருவர்.
இந்த அரசாங்கம் ஆட்சியில் தொடர சிறிசேன ஆதராவளித்துள்ளார். தற்போதைய விவசாய அமைச்சர் அவருடைய கட்சியான ளுடுகுP ஐ பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
நெல் மாஃபியாவில் ஈடுபடுபவர்கள் அனைவரும் பொலன்னறுவையில் இருப்பதால், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது மிகவும் எளிதானது. அவர்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கம் இதுவாகும்.
சிறிசேன இந்த அரசாங்கத்தில் இல்லாவிட்டாலும், தற்போதைய விவசாய அமைச்சர், மஹிந்த அமரவீர, அவரது கட்சித் தலைவர்களில் ஒருவர். மேலும் கூறுவதற்கு ஒன்றுமில்லை. அவரது கட்சியில் எத்தனை பேர் இந்த அரசாங்கத்தில் உள்ளனர் என்று பாருங்கள்?’
எனவே போராட்டத்தின் போது சிறிசேன பதாகைகளை வைத்திருப்பது அபத்தமானது. சிறிசேன நீங்கள் விவசாயிகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த குடிமக்களின், குறிப்பாக இளைஞர்களின் கேலிப் பொருளாகிவிட்டீர்கள் என்றார்.