ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் தமக்கு எதிரான நீதவான் விசாரணை மற்றும் அழைப்பாணையை சவாலுக்கு உட்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோரால் இந்த மனுவை எதிர்வரும் 10ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்டது.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு குறித்து எதிர்வரும் 14ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் கடந்த செப்டெம்பர் 16ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைப்பாணையை இரத்துச் செய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி தனது மனுவில் கோரியுள்ளார்.