5 லீற்றர் ரின் பால் உட்பட சில பொருட்களை நாடாளுமன்றிலிருந்து வெளியே கொண்டு செல்ல முற்பட்ட ஊழியர் ஒருவர் அதிகாரியிடம் சிக்கியுள்ளார்
நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்பாக உள்ள ஜயந்திபுர பாதுகாப்பு நுழைவாயிலில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் வழங்கிய தகவலுக்கமைய, உடனடியாக செயற்பட்டு இவ்வாறு அவரை பிடித்துள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேயிலை உள்ளிட்ட சில உணவுப் பொருட்களும் அதில் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் சார்ஜன்ட் நரேந்திர பெர்னாண்டோவின் பணிப்புரையின் பேரில் நேற்று விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விசாரணையின் பின்னர் சம்பவம் தொடர்பிலான விசேட அறிக்கை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவிடம் கையளிக்கப்படவுள்ளது.
இதேவேளை, நாடாளுமன்றத்தில் உள்ள பல கழிவறைகளில் வீசப்பட்டிருந்த சமைத்த கோழி இறைச்சியும் நேற்று (4) மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் அதிகாரிகள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட வந்துவிடுவார்கள் என்று பயந்து ஊழியர் அல்லது சிலர் இந்த செயலை செய்திருக்கலாம் பாதுகாப்புப் படையினர் சந்தேகிக்கின்றனர்.