Monday, September 15, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதொலைபேசி - இணைய கட்டண அதிகரிப்புக்கு அனுமதி பெறப்படவில்லை

தொலைபேசி – இணைய கட்டண அதிகரிப்புக்கு அனுமதி பெறப்படவில்லை

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிகரித்து அறிவித்துள்ள தொலைபேசி மற்றும் இணைய கட்டணங்களுக்கு அனுமதி பெறப்படவில்லை என தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

புதிதாக அமுல்படுத்தப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிக்கு அமைய, இன்று முதல் அமுலாகும் வகையில் தமது கட்டணங்களை மீண்டும் அதிகரிக்க அனைத்து தொலைதொடர்பு சேவை வழங்கல் நிறுவனங்களும் தீர்மானித்தன.

இதன்படி, இன்று முதல் தொலைக்காட்சி சேவைகள், முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு கட்டணப் பொதிகள் திருத்தப்படவுள்ளன.

புதிய கட்டணங்கள் தொடர்பிலான தகவல்கள் அந்தந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இணையத்தளங்களில் தரவேற்றப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், இந்த கட்டண உயர்வு தொடர்பில் இதுவரை எவ்வித அனுமதியும் பெறப்படவில்லை என தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles