தாய்லாந்தில் உள்ள ஆரம்ப பாடசாலை குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சுமார் 34 பேர் வரை கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் வடகிழக்கில் உள்ள நோங் புவா லாம்புவில் இடம்பெற்ற இந்த தாக்குதலுக்குப் பின்னர் துப்பாக்கிதாரி இன்னும் தலைமறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் சிறார்களும், பெரியவர்களும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதல் நடத்தியவர் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை துப்பாக்கியால் சுட்டு, கத்தியால் குத்தியுள்ளார்.
சந்தேகநபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளதுடன், தாக்குதலுக்கான நோக்கம் தெளிவாக இல்லை என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதன் காரணமாக, உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.
குறித்த அதிகாரி அண்மையில் காவல்துறை பணியில் இருந்த நீக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.