எதிர்வரும் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் எரிபொருள் விலை அதிகரிக்கலாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘இந்த கடினமான நெருக்கடியான பாதையில் நாம் முன்னேறும்போது நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட உலகளாவிய போக்குகளால் நாம் பாதிக்கப்பட நேரிடும். எரிபொருள் விலையும் அப்படிப்பட்ட ஒன்று.
யுக்ரைனில் ஏற்பட்டுள்ள போரின் தாக்கத்தால், எதிர்வரும் டிசம்பர், ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் உலகின் எரிபொருள் உற்பத்தி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஒபெக் அமைப்பு ஒன்று தங்கள் உற்பத்தியைக் குறைக்கப் போவதாக அறிவித்தது என்று நினைக்கிறேன்.
அதனால்தான் ஐரோப்பாவின் செல்வந்த நாடுகள் பாரியளவில் எரிபொருளை கொள்வனவு செய்கின்றன. எரிபொருள் சந்தையில் தட்டுப்பாடு நிலவுகிறது. இதில் பெரும்பாலான எரிபொருளை ஐரோப்பிய நாடுகள் கொள்வனவு செய்கின்றன. இதனால் இலங்கை போன்ற நாடுகளுக்கு எரிபொருள் விலை அதிகரிக்கும்.
குறிப்பாக இதன் காரணமாக இலங்கை மாத்திரமன்றி தெற்காசியாவின் பல நாடுகளும் இதனை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
எரிபொருள் விலை உயர்வை நுகர்வோர் தாங்கிக் கொள்ளக்கூடிய அளவில் வைத்திருக்கவே நாம் இப்போதே திட்டமிட வேண்டும். என்றார்.