Saturday, November 16, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொருளாதார நெருக்கடியிலிருந்து மீள 4 வழிகள்

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள 4 வழிகள்

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நான்கு வழிகள் உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க வருவாயை அதிகரிப்பது, அரசாங்க செலவீனங்களை குறைப்பது, நாட்டிற்குள் வரும் அந்நிய செலாவணியை அதிகரிப்பது மற்றும் நாட்டிலிருந்து வெளியேறும் அந்நிய செலாவணியை குறைத்தல் என்பன அவையாகும்.

இந்த நான்கு தெரிவுகளின் அடிப்படையில் எந்தவொரு பிரேரணையையும் ஏற்றுக்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

அடுத்த வருடம் அரசாங்கத்தின் மீள்செலவு ரூ.4,637 பில்லியனாகவும், மூலதனச் செலவீனம் ரூ.3,245 பில்லியனாகவும் இருக்கும் என்றும், இதன் மூலம் மதிப்பிடப்பட்ட மொத்த அரசாங்கச் செலவு ரூ.7,885 பில்லியனாக இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles