Friday, July 18, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீதிமன்றிடம் அறிவிக்காமல் 22 ஆவது திருத்தத்தில் மாற்றம்?

நீதிமன்றிடம் அறிவிக்காமல் 22 ஆவது திருத்தத்தில் மாற்றம்?

22 ஆவது அரசியலமைப்பு சட்டமூலம் நாளையும், நாளை மறுதினமும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தினால் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சில சரத்துக்கள் புதிய அரசியலமைப்புத் திருத்தத்தில் உள்ளடக்கப்படவுள்ளன.

தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள் நாடாளுமன்றத்தைக் கலைப்பதும் இந்த விதிகளில் ஒன்றாகும்.

எவ்வாறாயினும், நாடாளுமன்றம் கலைக்கும் காலத்தை நான்கரை வருடங்களாக அதிகரிப்பதற்காக உச்ச நீதிமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சில கட்டுரைகள் நாடாளுமன்றத்தில் குழுநிலையில் திருத்தப்பட உள்ளதாக டிலான் பெரேரா MP தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை கலைக்கும் காலத்தை நான்கரை வருடங்களாக அதிகரிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக நீதியமைச்சர் நேற்று நீதியமைச்சர்களின் ஆலோசனைக் குழுவில் தெரிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles