Friday, July 18, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரசியல் வேண்டாம்- ரொஷான் மஹாநாம

அரசியல் வேண்டாம்- ரொஷான் மஹாநாம

தமக்கு அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் இல்லை என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சர்வதேச கிரிக்கட் சம்மேளன போட்டி நடுவருமான ரொஷான் மஹாநாம தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த மஹாநாம, தான் அரசியலில் பிரவேசிக்க விரும்பினால், விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றபோதே அதனைப் பற்றி சிந்தித்திருக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலிமுகத்திடல் போராட்டத்துக்கு ஆதரவளித்து வந்த மஹாநாம அரசியலில் பிரவேசிக்கவுள்ளதாக முன்னதாக ஊகங்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன.

எனினும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், தம்மை அரசியலில் சேருமாறு அழைப்பு வந்ததாகவும், ஆனால் தாம் அதனை நிராகரித்ததாகவும் மஹாநாம தெரிவித்துள்ளார்.

தம்மை பொறுத்தவரையில் நாட்டிற்கு தமது தொண்டு நிறுவனம் மூலம் சேவையை பெற்றுக்கொடுப்பதிலேயே கவனம் உள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹாநாம குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles