2023ஆம் ஆண்டு ஆரம்பத்தில் 8,000 ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதுதொடர்பான தேர்வுகள் ஏற்கனவே ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் நடைபெற்று வருகின்றன.
ஆசிரியர்களாக விரும்புகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு அதற்கேற்ப திறமைப் பரீட்சையின் பின்னர் மாகாண அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்படுவர்.
அத்தகைய ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள் தேசிய கல்வி நிறுவனத்தால் நடத்தப்படும் கற்பித்தல் முறைகளில் டிப்ளோமாவை நிறைவு செய்ய வேண்டும் என்றார்.