நாடாளுமன்ற உறுப்பினர்களில் 80 வீதமானோர் தமது பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை தம்வசம் வைத்துக் கொண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொர நாடாளுமன்ற உறுப்பினரும் தனது உத்தியோகபூர்வ அதிகாரத்தினால் தனது பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்திருப்பதுடன், பல்வேறு காரணங்களால் கடந்த காலங்களில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் துப்பாக்கிகளை பெற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
எம்.பிக்களின் வீடுகள் மீதான தாக்குதல்களின் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் துப்பாக்கி கோரி விண்ணப்பித்ததாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
#Lankadeepa