Wednesday, December 31, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதோட்ட தொழிலாளர்களின் தீபாவளி முற்பணத்தை அதிகரிக்குமாறு சஜித் கோரிக்கை

தோட்ட தொழிலாளர்களின் தீபாவளி முற்பணத்தை அதிகரிக்குமாறு சஜித் கோரிக்கை

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி முற்பணத்தை 15,000 ரூபா வரை அதிகரிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரியுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த காலங்களில், பெரும்பாலான பெருந்தோட்ட நிறுவனங்களால் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 5,000 ரூபா வழங்கப்பட்டு வந்தது.

எனினும், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தீபாவளி பண்டிகையை கொண்டாட அந்தத் தொகை போதுமானதல்ல.

எனவே, எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் முற்பணத்தை 15,000 ரூபா வரை அதிகரிப்பது பொருத்தமாக இருக்கும் என தான் பரிந்துரைப்பதாக சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இவ்வாறு வழங்கப்படுவது கடன் என்பதால் தேயிலை சபை ஊடாக தலையிட்டு அரசாங்கம் இந்த முற்பணத்தை வழங்க முடியும் என அவர் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன, இது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதுடன், கடன்களை வழங்க ஆவணத்தை தயார் செய்யுமாறு தேயிலை சபைக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles