Wednesday, December 24, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையை பாராட்டிய உலக வங்கி

இலங்கையை பாராட்டிய உலக வங்கி

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் அரசாங்கத்தின் முன்முயற்சியை உலக வங்கி பாராட்டியதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

மாலைத்தீவுகள், நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் ஃபாரிஸ் ஹடாட்- செர்வோஸுடன் நடத்திய விசேட கலந்துரையாடலின்போது, இந்த பாராட்டு கிடைக்கபெற்றதாக அவர் தெரிவித்தார்.

வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி வருவதாகவும், மேலும் நிர்வாக சீரமைப்பு, விரிவான கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் திட்டத்தில் முன்னேற்றம் போன்றவற்றை மேலும் தொடர ஊக்குவிப்பதாகவும் உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் கூறினார்.

இலங்கையின் நிலைமையை உலக வங்கி உன்னிப்பாக அவதானித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles