பிணைமுறி மோசடியில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பானில் இருந்து இலங்கை திரும்பிய போது சிங்கப்பூரில் சந்தித்ததாக, எஸ்.எம்.மரிக்கார் எம்.பி குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் நிராகரித்துள்ளார்.
ஜனாதிபதி ஜப்பானில் இருந்து இலங்கை திரும்பும் வழியில் மகேந்திரனைச் சந்தித்து அவருடன் மதிய உணவு உட்கொண்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது என மரிக்கார் தெரிவித்துள்ளார்.
இதனை நிராகரித்த ஜனாதிபதி, மகேந்திரனுடன் நான் சந்திக்கவில்லை. நான் சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானத்தில் இருந்தபோது சிங்கப்பூர் அமைச்சருடன் காலை உணவை மாத்திரமே உட்கொண்டேன். வேண்டுமென்றால் அந்த உணவு பட்டியலை நாடாளுமன்ற உறுப்பினரிடம் காண்பிக்கலாம் என்றார்.