பெற்றோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்கப்போவதில்லை என முச்சக்கரவண்டி சாரதி சங்கங்கள் தெரிவித்துள்ளன.
வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க முடியாமல் உள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை மேலும் 10 லீற்றரால் அதிகரிக்குமாறு முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.