Friday, May 9, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசுகாதார துவாய்களின் விலை குறைக்கப்படும்

சுகாதார துவாய்களின் விலை குறைக்கப்படும்

உள்நாட்டு சுகாதார துவாய் (Sanitary Napkins) உற்பத்திகளுக்காக இறக்குமதி செய்யப்படும் ஐந்து மூலப்பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகளை விலக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகள் மத்தியில் சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில், சுகாதார அணையாடைகளை மலிவான விலையில் தயாரிப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இறக்குமதி செய்யப்படும் சுகாதார அணையாடைகளுக்கு வரிச் சலுகை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 10 சுகாதார துவாய்களை கொண்ட பொதியின் விலை 50 முதல் 60 ரூபாவினால் குறைக்கப்படும்.

இந்த வரிச் சலுகைகளுடன், ஒரு பொதியின் அதிகபட்ச சில்லறை விலை 260 – 270 ரூபாவாக நிர்ணயிக்கப்படும்.

மேலும், இறக்குமதி செய்யப்பட்ட முடிவுப் பொருட்களின் நுகர்வோர் சில்லறை விலைகள் 18% அல்லது 19% குறைக்கப்படும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கு இணங்க, வரிச்சலுகைகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரச அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles