கோதுமை மாவின் விலை அடுத்த வாரம் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (03) எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே வர்த்தக அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி இரண்டு வாரங்களுக்குள் கோதுமை மாவின் விலை 250 ரூபாவாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சுமார் 100 கோதுமை மா அடங்கிய கொள்கலன்கள் ஏற்கனவே கொழும்பு துறைமுகத்தில் இறக்கிவிட்டதாகவும், இந்த வாரத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா சந்தையில் தொடர்ந்து பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சர் குறிப்பிட்டார்.