ஒரு லீற்றர் டீசல் மூலம் சுமார் ஒரு ரூபா இலாபம் மட்டுமே ஈட்டப்படுவதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (03) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் ஒரு லீற்றர் பெற்றோலுக்கு சுமார் 70 ரூபா இலாபம் கிடைத்தமையினால் பெற்றோல் விலையை குறைக்க கூடியதாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தற்போது குறைவடைந்துள்ளதாக தெரிவித்த அவர், எதிர்வரும் 14-15 நாட்களுக்குள் பொதுமக்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் எரிபொருளின் விலையை தீர்மானிக்க முடியாது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.