Saturday, November 16, 2024
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎம்.பி வேதனத்தை கர்ப்பிணிகளுக்காக வழங்கினார் மஹிந்த

எம்.பி வேதனத்தை கர்ப்பிணிகளுக்காக வழங்கினார் மஹிந்த

ஹம்பாந்தோட்டையில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் அவதிப்படும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உணவளிக்க விவசாயம், வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து பெறுகின்ற சம்பளத்தை பயன்படுத்த தீர்மானித்துள்ளார்.

அத்துடன், தனது நண்பர்களிடமிருந்து பெறப்படும் நன்கொடைகளும் இதற்காக பயன்படுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள தாய்மார்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட வைத்திய அதிகாரி அலுவலகங்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஒவ்வொரு கர்ப்பிணித் தாய்க்கும் மாதாந்தம் 5000 ரூபா பெறுமதியான போஷாக்கு பொருட்கள் அடங்கிய உணவுப் பொதி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் 12 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தற்போது 6000 கர்ப்பிணித் தாய்மார்கள் இருப்பதாகவும், அவர்கள் அனைவருக்கும் தலா ஒரு போஷாக்கு பொருட்கள் அடங்கிய பொதி வழங்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles