Thursday, December 18, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் எவ்வித உலோகங்களும் கலக்கப்படவில்லை

இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் எவ்வித உலோகங்களும் கலக்கப்படவில்லை

இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் எவ்வித உலோகங்களும் கலக்கப்படவில்லை என முன்னெடுக்கப்பட்ட மாதிரி ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட 275 அரிசி தொகுதிகளில் இருந்து மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், இந்த விடயம் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கொள்கலன்கள் மற்றும் துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட அரிசியில் இருந்து குறித்த மாதிரிகள் பெறப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் தீங்கை ஏற்படுத்தும் உலோகங்கள் கலந்துள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்ததுடன், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவும் சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் மாதிரிகள் பெறப்பட்டு, சர்வதேச அங்கிகாரம் பெற்ற தனியார் ஆய்வுகூடம் ஒன்றுக்கு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

இதன்மூலம் அரிசியில் எவ்வித உலோக பொருட்களும் கலக்கப்படவில்லை என அறிக்கையொன்றின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles