Friday, February 13, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉணவு பணவீக்கம் மேலும் அதிகரிப்பு

உணவு பணவீக்கம் மேலும் அதிகரிப்பு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் வருடாந்த புள்ளி மாற்றத்தினால் அளவிடப்படும் பணவீக்கம் மேலும் அதிகரித்துள்ளது.

ஓகஸ்டில் 64.3% ஆக இருந்த இது செப்டம்பரில் 69.8% ஆக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின்படி, ஓகஸ்ட் மாதத்தில் 93.7 சதவீதமாக இருந்த உணவுப் பொருட்களின் பணவீக்கம் செப்டெம்பர் மாதத்தில் 94.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கடந்த மாதம் 50.2 சதவீதமாக இருந்த உணவு அல்லாத பணவீக்கம் இந்த மாதம் 57.6 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி ஓகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 70.2 சதவீதமாக இருந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles