பொது அலுவல்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழு (COPE ) மற்றும் பொதுக் கணக்குகளுக்கான நாடாளுமன்றக் குழு (COPA ) ஆகியவற்றுக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன எதிர்வரும் 3ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு இழுபறிகளால், COPE மற்றும் COPA குழுக்களுக்கான நியமனம் சுமார் ஒரு மாத காலம் தாமதமானது.
இதேவேளை, கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவர் பதவிகளை SJBக்கு வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் பல தடவைகள் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
அந்த இரண்டு குழுக்களின் தலைவர் பதவிகளும் எதிர்க்கட்சிக்கு வழங்கப்படாவிட்டால், மற்ற குழுக்களில் பங்கேற்பது குறித்து இருமுறை யோசிக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.