Wednesday, May 14, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவன விலங்குகளை வேட்டையாடுதல் அதிகரிப்பு

வன விலங்குகளை வேட்டையாடுதல் அதிகரிப்பு

சந்தையில் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு காரணமாக தேசிய பூங்காக்களில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவது அதிகரித்துள்ளது என இலங்கை வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பொலன்னறுவை மின்னேரிய, சோமாவதி, வஸ்கமுவ, மதுருஓயா, ஜலகெலும் நிம்னா தேசிய பூங்கா மற்றும் ஏனைய வனப்பகுதிகளில் வன விலங்குகளை வேட்டையாடுவது அதிகரித்துள்ளதாக சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்த்துள்ளார்.

சந்தையில் கோழி இறைச்சியின் விலை வேகமாக உயர்ந்து வருவதால் வன விலங்குகளை வேட்டையாடும் தேவை அதிகரித்துள்ளது.

எனவே வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தை அத்தியாவசிய சேவையாக மாற்றி இலங்கையின் காடுகளையும் வனவிலங்கு வளங்களையும் பாதுகாக்கும் வேலைத்திட்டத்தை ஏற்பாடு செய்யுமாறு சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles