ரயில் கட்டுப்பாட்டாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட தொழில்சங்க நடவடிக்கை காரணமாக இன்று இயக்கப்படவிருந்த ரயில்கள் தாமதமாகவோ அல்லது இரத்து செய்யப்படவோ வாய்ப்புள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் கட்டுப்பாட்டாளர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவு வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.